Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரத்தன் இந்தியா பவர் நிகர லாபம் ரூ.38 கோடி

ரத்தன் இந்தியா பவர் நிகர லாபம் ரூ.38 கோடி

செலவுகள் ரூ.774.96 கோடியிலிருந்து ரூ.749.36 கோடியாகக் குறைந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

செலவுகள் குறைந்ததால், ரத்தன்இந்தியா பவர் நிறுவனம் செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் ரூ.38.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.31.55 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.743.41 கோடியிலிருந்து ரூ.787.73 கோடியாக உயர்ந்துள்ளது. செலவுகள் ரூ.774.96 கோடியிலிருந்து ரூ.749.36 கோடியாகக் குறைந்துள்ளன.


மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இந்நிறுவனத்துக்கு 1,350 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையம் உள்ளது. முதல் அரையாண்டில் அதன் உற்பத்தித் திறன் பயன்பாடு 85.01 சதவீதமாக இருந்தது.


மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மின் சந்தையில் 20.26 மில்லியன் யூனிட் மின்சாரத்தை விற்றதன் மூலம் ரூ.16.94 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது மின் கொள்முதல் ஒப்பந்த வருவாய்க்கு கூடுதலாகக் கிடைத்ததாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
OpenAI expands AI safety monitoring
அடுத்த செய்தி
அரசுப் பணி வயது உச்சவரம்பு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தொடர்புடைய செய்திகள்